நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் பெரும்பாலும் பதிவாகி வருவதாக சமூக சுகாதார நிபுணர் டொக்டர் துஷானி தபரேரா தெரிவித்தார்.
இந்த நோய் ஒரு பாக்டீரியாவால் பரவுகிறது என்றும், இந்த பாக்டீரியா பொதுவாக பாலூட்டிகளின் சிறுநீர் பாதையில் வாழ்கிறது என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக நீரில் மூழ்கிய நெல் வயல்களுக்குள் செல்லும்போது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறைகள் கோரிக்கை விடுத்துள்ளன.