பிரதமர் ஹரிணி அமரசூரியவை அந்தப் பதவியிலிருந்து
மாற்றுவது குறித்து எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அமைச்சரவையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை தொடர்பான செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்துள்ளார்.