Our Feeds


Saturday, June 21, 2025

Sri Lanka

மின்சாரக் கட்டண அதிகரிப்பு - அத்தியவசிய பொருட்களின் விலை உயர்வு!


மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவால், அத்தியவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதேவேளை, நாடு முழுவதும் அரிசி, தேங்காய், காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் சந்தையில் பெருமளவில் உயர்ந்துள்ளதால், மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன் சவர்க்காரம், சலவைத்தூள், பற்பசை மற்றும் ஷம்போ போன்ற பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன.

வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் நுகர்வுப் பொருட்களை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு விலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நுகர்வோர் சங்கங்கள் கூறுகின்றன.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை நீதியின் முன் நிறுத்த சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் நுகர்வோர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், பல கல்வி கற்பிக்கும் வகுப்புகளின் கட்டணங்கள் பெருமளவில் அதிகரித்ததால் பெற்றோர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பல வகுப்புகளின் கட்டணம் ரூ.3000 - 6000, 7000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் இந்த விடயத்தில் தலையிட்டு சரியான முடிவை எடுக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »