தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பலாங்கொடை பிரதேச சபைக்கு தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஞ்சித் உதய குமார, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதன்படி, பலாங்கொடை பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி சுரங்க அம்பகஹதென்ன, வெற்றிடமான பதவிக்கு கமஎதிகே ஆரியதாசவை புதிய தவிசாளராக தேர்ந்தெடுத்துள்ளார்.
அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.