Our Feeds


Wednesday, June 18, 2025

SHAHNI RAMEES

பின்வாங்க வாய்பில்லை! - இஸ்ரேலின் மீதான அடி தொடரும்! - டிரம்புக்கு ஈரானின் "உச்ச தலைவர்" பதிலடி.

 


இந்நிலையில் ஈரான் உச்ச தலைவர் நிபந்தனையின்றி

சரணடைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


ஈரானின் "உச்ச தலைவர்" என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு எளிதான இலக்கு, ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை வெளியே கொண்டுவரப் போவதில்லை (கொல்லப் போவதில்லை!), குறைந்தபட்சம் இப்போதைக்கு அது நடக்காது. ஆனால் பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!


இந் நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அல் கொமெய்னி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.


இனி ஸியோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்கள்) இரக்கம் காட்ட முடியாது. அந்த தீவிரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று அவர் எச்சரித்துள்ளார்.


ஏற்கெனவே இந்த எச்சரிக்கையை ஆங்கிலம் மற்றும் பார்ஸி மொழியில் வெளியிட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அல் கொமெய்னி தற்போது அதனை ஹீப்ரூ மொழியில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கா, இஸ்ரேல் கொமெய்னிக்கு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே அவர் பதிலுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »