காசாவை நோக்கி கடல் பயணத்தை மேற்கொண்டுள்ள
நாங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை விட பாலஸ்தீனிய மக்கள் உயிர்பிழைத்து வாழ்வதற்காக பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர் என காசாவை நோக்கி கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளசூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார்காசா நோக்கி செல்லும் மட்லீன்கப்பலில் இருந்து சிஎன்என்னிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
எங்கள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆபத்து மதிப்பீடுகளின் போது ஆளில்லா விமானங்கள் உட்பட சகலவகையான ஆபத்துக்கள் குறித்தும் ஆராய்ந்தோம்.
இதற்கு முன்னர் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்ட கப்பல்கள் எதிர்கொண்ட ஆபத்துக்களை வன்முறைகளை தாக்குதல்களை நாங்கள் அறிவோம்.
நாங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் எவையையும் காசாவில் உயிர்பிழைத்து வாழ்வதற்காக பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களுடன் ஒப்பிடவே முடியாது,
எங்களுடைய நோக்கம் காசாவிற்கு சென்று எங்களிடம் உள்ள மனிதாபிமான பொருட்களை ஒப்படைப்பதே எங்கள் நோக்கம் , ஆபத்துக்கள் குறித்து நாங்கள் அறிந்திருக்கின்றோம் ஆனால் நாங்கள் எங்கள் நோக்கத்தை இலக்கா கொண்டு பயணிக்கின்றோம்