அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறையில்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (21) சீனாவின் செங்டுவில் கைச்சாத்திடப்பட்டது.சீன அரசாங்கத்தின் சார்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹெஜுனும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் கிருஷாந்த அபேசேனாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.