அமெரிக்க உப ஜனாதிபதி ஜே. டி . வான்ஸ் ஜோபைடனின் நிர்வாகம் உக்ரைன் மோதலுக்கு மாத்திரம் 300 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், வொஷிங்டன் உக்ரைனுக்கு இராஜதந்திரம் குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் பைத்தியக்காரத்தனமாக பணத்தை செலவிட்டது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போதைய அமெரிக்க நிர்வாகம் சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவை பல உயர் மட்ட சந்திப்புகளில் ஈடுபடுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் இஸ்தான்புல் பேச்சுவார்த்தைகளில் இருந்து உக்ரைன் ஒருதலைப்பட்சமாக விலகியதிலிருந்து, இராஜதந்திர உந்துதல் மூலம் ரஷ்யா உக்ரைனுக்கிடையில் முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வழிவகுத்துள்ளதோடு ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
இதேவேளை ஜேபைடனின் நிர்வாகத்தின் கீழ் உக்ரைனுக்கு வழங்கிய இராணுவ உதவிகள் தொடர்பாக ட்ரம்ப் பலமுறை விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.