Our Feeds


Thursday, June 26, 2025

Admin

கல்குலம பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்!



அனுராதபுரம் - திரப்பனை, கல்குலம பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை பகுதியை சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார் என்பது இன்னும் தகவல் வௌியாகவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து திரப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »