Our Feeds


Thursday, June 19, 2025

Admin

கஹவத்தை பிரதேச சபை மற்றும் குளியாப்பிட்டி நகர சபையின் அதிகாரம் SJB வசம்!




எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட இரத்தினபுரி கஹவத்தை பிரதேச சபை மற்றும் குளியாப்பிட்டி நகர சபை ஆகியவற்றின் அதிகாரத்தை நேற்று கைப்பற்றியது ஐக்கிய மக்கள் சக்தி.

அதன்படி, இரத்தினபுரி கஹவத்தை பிரதேச சபையின் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது பெரும்பான்மையைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி  வேட்பாளர் குருகே சாந்த பிரியங்கர இன்று இரத்தினபுரி கஹவத்தை பிரதேச சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல, அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி நகர சபையின் மேயருக்கான தேர்தல் நடைபெற்றபோது பெரும்பான்மையைப் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் காமினி கருணாரத்ன இன்று குளியாப்பிட்டி நகர சபையின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »