அமெரிக்க அரசின் முயற்சியாலேயே இந்தியா Vs பாகிஸ்தான் போர் நிறுத்தம்
வந்தது என்ற வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அப்போது பேசியது சர்ச்சையானது.ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதற்கு நேரடி ராணுவ பேச்சுவார்த்தைகளே காரணம் என்றும், பாகிஸ்தானுக்கு எதிரான போர்நிறுத்த முடிவை எடுத்ததற்கு அமெரிக்காவின் தலையீடோ அல்லது 3-ம் நாட்டின் தலையீடோ கிடையாது என்றும் தொடர்ந்து இந்தியா உறுதியாக கூறி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் தடுத்து நிறுத்தப்பட்டதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.
செர்பியா, கொசோவோ இடையேயான போரை தடுத்து நிறுத்தியதற்காக, எகிப்து மற்றும் எத்தியோப்பியா இடையேயான போரை தடுத்து நிறுத்தியதற்காக, மத்திய கிழக்கு பகுதியில் ஆபிரகாம் ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என பதிவிட்டு இருக்கிறார்.
ரஷியா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஈரான் உள்பட நாடுகளுக்கு இடையேயான விவகாரங்களில் நான் என்ன விசயங்களை மேற்கொண்டாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என்றும் அவர் பதிவிட்டு உள்ளார்.