தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்
அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.சுங்க திணைக்களத்தின் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக விமல் வீரவன்ச இன்று புதன்கிழமை (09) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது விமல் வீரவன்சவிடம் இருந்து 2 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
