கொங்கோவில் உள்ள தேவாலயமொன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேசஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு கொங்கோவின் கோமாண்டோ பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவலாயமொன்றில் நேற்று (27) ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது தேவாலயத்துக்குள் புகுந்த நேச நாட்டு ஜனநாயக படை என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்த வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றையும் கிளர்ச்சியாளர்கள் தீயிட்டு எரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.