110 கோடி ரூபா பெறுமதியான 35 கிலோ தங்கத்துடன் விமான நிலைய சுங்கத்திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் துபாயில் இருந்து நாட்டிற்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் 195 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 13 கிலோ நகைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
