Our Feeds


Tuesday, July 8, 2025

SHAHNI RAMEES

இலங்கை தமிழர்களுக்கு ரூ.39 கோடியில் 729 வீடுகள்! - தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

 

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளை தமிழகமுதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான கவுரவமானஇமேம்படுத்தப்பட்ட வாழ்க்கை உறுதி செய்யப்படும். இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.


அதன் ஒரு பகுதியாகஇ 26 மாவட்டங்களில் உள்ள 67 முகாம்களில் பழுதடைந்த 7469 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கெனவே 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 2781 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாகஇ பொது மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு திருப்பூர் - திருமூர்த்தி நகர் சேலம் தம்மம்பட்டி தருமபுரி - நாகாவதி அணை கேசர்குளி அணை விருதுநகர் - கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »