செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் இன்று (05) வரை மொத்தமாக 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 42 முழுமையாக அகழப்பட்டுள்ளது. மேலும் 3 இடங்கள் அகழ்வுக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் ஏற்கனவே அடையாளப்படுத்திய அருகிலுள்ள இடத்தில் அகழ்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு இன்று மனித மண்டையோடு என சந்தேகிக்கப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இயந்திரத் துப்பாக்கி ரவைக்கூடு (machine gun barrel) என சந்தேகிக்கப்படும் ஒரு ஆயுத பகுதி அகழ்வில் கண்டெடுக்கப்பட்டு, மேலதிக ஆய்வுக்காக யாழ்ப்பாணம் வெடிப்பொருள் மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரப்பர் செருப்பின் ஒரு துண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு பொருளும் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Saturday, July 5, 2025
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இதுவரை 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »