Our Feeds


Monday, July 28, 2025

SHAHNI RAMEES

ஜனாதிபதி நிதியத்தால் கௌரவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் A/L பரீட்சையில் முதலிடம்பெற்ற மாணவர்கள்.. #PHOTOS:

 


ஜனாதிபதி நிதியத்தால் A/L  பரீட்சையில் கிழக்கு

மாகாணத்தில் முதலிடம்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  இன்று (27) மட்டக்களப்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.  6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் பெறுபேறுகளைப் பெற்ற  10 மாணவர்கள் வீதம் 360 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் 36 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.

நிகழ்வில் கருத்துத்தெரிவித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஜனாதிபதி நிதியம் இதுவரை உதவி தேவையான யாரையும் கைவிடவில்லை என்றும், நாட்டின் பிள்ளைகளின்  கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஜனாதிபதி நிதியம் யாருடைய தனியார் நிதியமல்ல என்றும், அது நாட்டு மக்களின் பங்களிப்புகளுடன் இயக்கப்படும் நிதியம் என்றும் சுட்டிக்காட்டிய சபாநாயகர், அதன் நன்மைகள் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.











Subscribe to this Blog via Email :
Previous
Next Post »