"நீங்கள் புகைப்படத்தை உற்று நோக்கினால், அந்த சிறுவன்
பிளாஸ்டிக் பை அணிந்திருப்பதை பார்க்க முடியும். ஏனெனில் எந்த மனிதாபிமான உதவி கிடைக்கவில்லை."குழந்தை முஹம்மதுவும் அவரது தாயாரும் காஸாவின் வடக்கே உள்ள தங்கள் வீட்டிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், காஸா பகுதியில் உள்ள பலரைப் போல, இவர்களும் ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவித்து வருகின்றனர்.
காஸாவில் உள்ள புகைப்படக் கலைஞரான அஹமது அல்-அரினி, "காஸாவில் குழந்தைகள் அனுபவிக்கும் கடும் பசியை உலகுக்கு காட்ட விரும்பினேன்" அதனால் இந்த புகைப்படங்களை எடுத்ததாகக் கூறுகிறார்.
அஹமதின் கூற்றுப்படி, தாயும் மகனும் “முற்றிலும் வெறுமையாக” உள்ள ஒரு கூடாரத்தில் வசித்து வருகின்றனர். அது “ஒரு கல்லறையைப் போல” உள்ளது. உதவியும் தேவையான பொருட்களும் கிடைக்காததால் “விலைகள் கடுமையாக உயர்ந்துவிட்டன”. இதனால் அடிப்படை தேவைகள் கூட பலருக்குத் கிடைப்பதில்லை.
காஸாவில் ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாகவும், இதன் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் ஐ.நா.வின் பாலத்தீன அகதிகள் நிறுவனம் (Unrwa) தெரிவித்துள்ளது.
பாலத்தீன எல்லைக்குள் நுழையும் அனைத்து பொருட்களையும் இஸ்ரேல் கட்டுப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
(📷 Ahmed Jihad Ibrahim Al-arini, Getty Images)
#Gaza #FreePalestine
Thanks: BBCTamil

.jpeg)
.jpeg)
