Our Feeds


Thursday, July 24, 2025

Zameera

நோர்வூட் நிவ்வெளியில் பூ மரம் சாய்ந்ததால் போக்குவரத்து துண்டிப்பு


 நோர்வூட் நிவ்வெளி பகுதியில் பிரதான வீதியில் இன்று அதிகாலை வேளையில் சாலை ஓரத்தில் இருந்த பாரிய பூ மரம் ஒன்று சாய்ந்ததால் போக்குவரத்து துண்டிப்பு.


இச் சம்பவம் இன்று காலை 5.45 அளவில் இடம் பெற்று உள்ளது என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் நிவ்வெளி தோட்ட மக்கள் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றினர்.அதனை தொடர்ந்து மஸ்கெலியா ஹட்டன் போக்குவரத்து சீர் செய்ய பட்டது.


கடந்த சில நாட்களுக்குள் அப் பகுதியில் சுமார் ஜந்து மரங்கள் சாய்ந்து போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிக்க பட்டது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து நிவ்வெளி தோட்ட அதிகாரி மற்றும் நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன் வந்து அப் பகுதியில் உள்ள ஆபத்தான நிலையில் உள்ள அனைத்து மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.


மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »