Our Feeds


Thursday, July 17, 2025

SHAHNI RAMEES

இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை தடுப்போம்! - கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம்.

 

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யப்போவதாக கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை தடுக்கப்போவதாகவும இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.



ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான ஆறு நடவடிக்கைகள் குறித்த இணக்கப்பாட்டுடன் கொலம்பிய மாநாடு முடிவடைந்துள்ளது.

கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் ஹேக் குழு என  அழைக்கப்படுகின்றன. இந்த குழுவில் பொலிவியா கொலம்பியா இந்தோனேசியா கியுபா ஈராக் மலேசியா உட்பட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன.


ஆயுதங்கள் வெடிமருந்துகள் இராணுவ எரிபொருள் தொடர்புடைய இராணுவ உபகரணங்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு பொருட்களை இஸ்ரேலுக்கு வழங்குவதையோ அல்லது மாற்றுவதையோ தடுப்பது;

இஸ்ரேலுக்கு மேற்கூறிய பொருட்களை எடுத்துச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ள எந்தவொரு துறைமுகத்திலும் கப்பல்களின் போக்குவரத்துஇ நறுக்குதல் மற்றும் சேவையைத் தடுப்பது;

பங்கேற்கும் நாடுகளில் கொடியிடப்பட்ட கப்பல்களில் அத்தகைய பொருட்களை கொண்டு செல்வதைத் தடுத்தல்;

இஸ்ரேலின் பாலஸ்தீன சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிப்பதிலிருந்தும் அதன் சட்டவிரோத இருப்பை நிலைநிறுத்துவதிலிருந்தும் பொது நிறுவனங்கள் மற்றும் நிதிகளைத் தடுக்க அனைத்து பொது ஒப்பந்தங்களையும் அவசரமாக மறுஆய்வு செய்யத் தொடங்குதல்



சர்வதேச சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான இஸ்ரேலிய குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான கடமைகளுக்கு இணங்குதல்; மற்றும்

பாலஸ்தீனத்தில் செய்யப்படும் சர்வதேச குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான தேசிய சட்ட கட்டமைப்புகள் மற்றும் நீதித்துறைகளில் உலகளாவிய அதிகார வரம்பு கட்டளைகளை ஆதரித்தல்ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »