Our Feeds


Friday, July 18, 2025

Zameera

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச் சட்டம் மீள்பரிசீலிக்கப்பட வேண்டும்


 (எம்.ஆர்.எம்.வசீம்)

தேங்காய் எண்ணெய் சில்லறைக்கு விற்பனை செய்வதை தடை செய்வதற்கு அரசாங்கம் கொண்டுவர இருக்கும் சட்டத்தைை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என சமூக  நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக  சமூக  நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உணவு நுகர்வு தொடர்பான பொருட்கள் மற்றும் சேவைகள் மீது சட்டங்களை விதிக்கும்போது இலங்கையின் சமூக மற்றும் கலாசார பின்னணிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் இயற்றப்படக்கூடாது என்பதை வலியுறுத்தும் நமது அமைப்பு, தேங்காய் எண்ணெய் சில்லறைக்கு விற்பனை செய்வதை தடைசெய்து இயற்றப்படும் சட்டத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.

தேங்காய் எண்ணெய் சந்தையில் நிகழும் சில முறைகேடுகளைக் கட்டுப்படுத்த இதுபோன்ற ஒரு சட்டம் இயற்றப்பட காரணமாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபோதும், அத்தகைய சட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களை தொடர்பில் குறித்த தரப்பினர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில், குறிப்பாக உணவு மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை கொள்வனவு செய்யும்போது திறன் மற்றும் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் விலைக்கு வாங்கும் கலாசாரம் தொடர்பில் புரிந்துணர்வுடன் இவ்வாறான தீர்மனங்கள் எடுக்கப்பட வேண்டும்.

உண்மையில், எமது நாட்டு கிராம மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது, நகரில் வாழும் குறைந்த வருமானமுடையவர்கள் தேங்காய் எண்ணெய் போன்ற சில பொருட்கள் மற்றும் உபகரணங்களை சில்லறை அளவில் அன்றி உயர்ந்த மட்டத்தில் விலைக்கு வாக்க வசதி இல்லை.

எந்தவொரு சில்லறை வியாபார நிலைய மொன்றில் பொருட்கள்  விற்பனை செய்யப்படும் வடிவத்தை பார்க்கும்போது, அதுதொடர்பில் கண்டுகொள்ள முடியும். விசேடமாக தேங்காய் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பார்க்கும்போது, அவர்களில் பெரும்பான்மையானவர்கள், கால்வாசி அல்லது அறைவாசி போன்ற அளவிலே கொள்வனவு செய்வதை பார்க்க முடியும்.

அதேபோன்று மத நடவடிக்கைகளுக்காக ஆலயங்கள் மற்றும் விகாரைகளுக்கு வரும் மக்கள் மத்தியிலும் தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் சிறிய அளவிலே கொண்டுவரப்படுகின்றன. அதன் பிரகாரம் நமது நாட்டின் பொது வாழ்க்கையின் தன்மையையும், மக்களின் செயற்பாட்டு சக்தியையும் கருத்தில் கொண்டு, இதுபோன்ற முடிவுகளை எடுப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. அவ்வாறான தீர்மானத்தை உடனடியாக செயற்படுத்துவது மக்களுக்கு செய்யும் பாரிய அநீதியாகும்.

அதனால் அரசாங்கம் தேங்காய் எண்ணெய் சில்லறைக்கு விற்பனை செய்ய முடியாதவகையில் சட்டம் கொண்டுவர முயற்சிப்பதாக இருந்தால் அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு நாங்கள் மிகவும் தேவையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் மக்கள் வாழ்க்கையின் இலகுவான கலாசார வாழ்க்கை போக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தீர்மானங்கள் எடுப்பதை தவிர்ந்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »