Our Feeds


Friday, July 11, 2025

SHAHNI RAMEES

மத்தள விமான நிலையம் தொடர்பான அரசின் நிலைப்பாடு!

 

மத்தள சர்வதேச விமான நிலையத்தை விமானங்களுக்கு

தயார்படுத்த இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 


விமான நிலையத்தை அதன் தற்போதைய நிலையில் பராமரிப்பதன் மூலம் அரசாங்கம் கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். 


நேற்று (10) விமான நிலையத்தை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் இவ்வாறு கூறினார். 


"மத்தள விமான நிலையத்தை விமானங்களை கொண்டு வரக்கூடிய அளவுக்கு கட்டமைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஓரிரு வருடங்களில் அதை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம். 


ஆனால் இந்த விமான நிலையம் எங்களிடம் இருப்பதால், எங்களுக்கு நிறைய செலவுகள் மற்றும் கடன் உள்ளது. 


மேலும், இலங்கைக்கு ஒரு மாற்று விமான நிலையம் தேவை. இது எங்களுக்கு கூடுதல் நன்மையாக உள்ளது. 


நாங்கள் தற்போது கலந்துரையாடி வருவது விமானங்களை கொண்டு வர. இது ஒரு பெரிய விடயம். 


இதற்காக சரியான முதலீட்டாளர்களை நாம் கொண்டு வர வேண்டும். 


இதற்கிடையில், விமானங்களை பழுதுபார்ப்பது போன்ற தொழில்களைச் செய்ய முடியும். 


விமான நிலையத்தில் நிறைய இடம் இருப்பதால், விமான ஓடுபாதைக்கு வெளியே உள்ள பகுதிகளில் சோலார் பேனல்கள் போன்ற தொழில்களுக்குச் செல்ல முன்மொழியப்பட்டுள்ளது. 


இது உண்மையில் வணிகத் திட்டம் இல்லாமல் கட்டப்பட்ட விமான நிலையமாகும். கடன் மலைபோல் குவிந்துள்ளது. 


260 மில்லியன் டொலர் கடன். 2030க்குள் அதை செலுத்த வேண்டும். 


கட்டுநாயக்காவில் சம்பாதித்த பணம் இங்கு கொண்டு வரப்படுகிறது. "இது பணத்தை வீணடிப்பதாகும். இது ஒரு வெறிச்சோடிய விமான நிலையம்," என்று அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »