சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் ஆல் சவுத், காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்தை அடைவதே தற்போது தங்கள் நாட்டின் முன்னுரிமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவிற்கு விஜயம் செய்திருந்த அவர், இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்குவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது இந்த கருத்தை வெளியிட்டார் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, 2020 ஆம் ஆண்டு ஆபிரகாம் உடன்படிக்கையின் அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் பல அரபு நாடுகளுக்கு இடையே முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறது.
ஆனால், பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமலும், 1967 எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன நாடு அங்கீகரிக்கப்படாமல் இஸ்ரேலுடன் உறவு இயல்பாக்கப்பட முடியாது என சவூதி அரேபியா உறுதியாக தெரிவித்துள்ளது.