Our Feeds


Friday, July 4, 2025

Sri Lanka

லஞ்சம் எடுத்த கதுருவெல காதி நீதிபதியும் கிளார்க் ஒருவரும் கைது!


கதுருவெல காதி நீதிமன்ற நீதிபதியும் கிளார்க் ஒருவரும் இன்று (04) லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பிலான லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி,

விவாகரத்து வழக்கு ஒன்றில் பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதற்காக இந்த லஞ்சப் பணம் கோரப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, சந்தேகநபர்கள் கதுருவெல மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »