குருக்கல் மடத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில்
என்ன செய்ய போகிறீர்கள்? - ஹக்கீம் நீதியமைச்சரிடம் கேள்விரவூப் ஹக்கீம் ஏன் இந்த கேவலமான அரசியலைச் செய்ய வேண்டும் ?
எந்தக் காலத்திலும் அரசியல் அதிகாரமற்ற தமிழ் முஸ்லிம் தேசிய இனங்களை மோத விட்டு அதில் குளிர் காய்ந்தது பேரினவாத அரசே.
அதே போல் முஸ்லிம் மக்களுக்கு வி.புகளால் நிகழந்த பாதிப்புகளுக்கு தமிழ் மக்களாகவே பல தடவைகள் வருந்தி இருக்கின்றோம்.
அத்தோடு தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கருதினால் அதைக் கேட்கும் உரிமை முஸ்லிம் மக்களுக்கு உண்டு.
நீதி கேட்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் இதை ரவுப் ஹக்கீம் கேட்பது தான் நகைச்சுவை.
ஹக்கீம் அவர்கள் வி.புகளின் தலைவரை நேரடியாக சந்தித்த பின் தெரிவித்த கருத்துக்களில் அவர்கள் நிலைப்பாடுகள் தொடர்பாக தெளிவாக கூறியிருந்தார்.
அதன் பின் எத்தனையோ தடவைகள் அரசின் முக்கிய அமைச்சராக எல்லாம் இருந்தார்.
அதிலும் நீதி அமைச்சராக வேறு இருந்தார், அவர் மக்களுக்காக நீதி கேட்கக் கூடிய அதி உச்ச பீடத்தில் இருக்கும் போது வடை சுட்டுக்கொண்டா இருந்தார்?
பிள்ளையான் கருணா போன்றவர்களை அரசு இணைக்கும் போது அதே அரசில் அவர்களோடு பங்காளியா இருந்தார்.
முஸ்லிம் தமிழ் மக்களின் கடந்த கால விடயங்களில் பல கசப்புணர்வுகள் உள்ளது. ஊர்காவற்படையின் படுகொலைகள் , வி.புகளின் படுகொலைகள் என்றெல்லாம் இரு தரப்பும் தொடர்ந்து வாதிடுகிறது. ஆனால் இரண்டு தரப்புக்கும் இந்த நாட்டில் ஒரே விதமான அடக்குமுறையே உள்ளது.
தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு நன்றாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எனக்கு இரு சமூகமும் வேறு வேறு அல்ல.
ஹக்கீம் போன்ற சந்தர்பவாத அரசியல்வாதிகள் இன்று முஸ்லிம் சமூகன் எதிர் நோக்கும் அடக்குமுறைக்கு என்ன செய்கின்றார்கள் ? கடந்த காலங்களில் அரசு நிகழ்திய தாக்குதல்கள் ஜனாசா எரிப்புகள் தீவிரவாத முத்திரைக்கெல்லாம் இன்னுமே நியாயமான பதில் கிடைக்கவில்லை.
ஹக்கீமை விட நான் இதய சுத்தியுடன் முஸ்லிம் மக்களுக்காக பேசுகிறேன் என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
தோண்டி எடுத்து யாரைத் தண்டிக்கப் போகின்றார்? அதையும் தெளிவாக கூற வேண்டும்.
ஒரு நீதி கேட்கும் போராட்டத்தை பேரினவாதம் குழப்புவது வேறு ஆனால் இன்னொரு சிறிய தேசிய இனத்தை சேர்ந்தவர் குழப்புவது உண்மையிலே மிக மிக வருத்தமானது.
முஸ்லிம் சகோதர்கள் இதை புரிந்துகொள்வார்கள் என்பதை நான் நம்புகிறேன் ❤️🙏🏽
சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த்
