கைது செய்யப்பட்ட பியூமி ஹன்சமாலியின் மகன் ஐந்து லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (13) பதில் மேலதிக நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இராஜகிரிய கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.