Our Feeds


Wednesday, July 23, 2025

Sri Lanka

அவசரகால சட்டத்தினால் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் ரணில் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு!


கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி அறகலைய போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவரசகாலச்சட்ட விதிமுறைகளினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (23) தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2 ஆவது விதிமுறையின் கீழ் பிரகடனப்படுத்திய அவசரகால சட்ட விதிமுறைகள் தன்னிச்சையானதும் அதிகாரமற்றதுமான செயற்பாடென மூவரடங்கிய நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »