2 மாதங்களுக்கு தேவையான எரிபொருளை சேமித்து வைக்க இலங்கையில் களஞ்சிய வசதி இல்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.
2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் களஞ்சியப்படுத்தட்டு இருப்பதாக அரசு கூறிவிட்டு தற்போது எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமை தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இதனை குறிப்பிட்டார்.
நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக நாம் கூறவில்லை 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளாதாகவே நாம் கூறினோம் என அவர் மேலும் கூறினார்.