Our Feeds


Sunday, July 6, 2025

Sri Lanka

மாபெரும் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன - பிரதியமைச்சர் நளின் ஹேவகே!


அரசின் கொள்கையான வளமான நாடு -அழகான வாழ்க்கை மூலம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதற்காக  மாபெரும் சீர்திருத்தங்கள் இந்த காலகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதென தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.

கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

அரசின் கொள்கையான வளமான நாடு அழகான வாழ்க்கை மூலம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதற்காக மாபெரும் சீர்திருத்தங்கள் இந்தகாலகட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

அந்த மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்த முதலில் இந்த இடங்கள் புதுப்பித்தல் நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு உள்ளாக வேண்டும். இளைஞர்களின் யுவதிகளினதும் மனப்பான்மைகளில் மேம்பாடு ஏற்பட வேண்டும். 

தற்போதைய இளைஞர்கள யுவதிகள் தொழில்நுட்பத்துடன் முன்னால் வந்துள்ளனர். இருப்பினும் நிறுவனக் கட்டமைப்பானது பல மைல்களுக்குப் பின்னாலேயே இருந்து வருகின்றன.ஆகையால் நாம் இந்த நவீன இளைஞர்களுக்கு ஏற்ற நிறுவனச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அதனாலேயே இன்று இலங்கையில் 311 நிறுவனங்களில் பாரிய உழைப்பு நடவடிக்கை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

160,000 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து நாடு முழுவதிலும் தங்கள் நிறுவன அமைப்பை உருவாக்கும் பணியை ஆரம்பித்திருக்கின்றனர்.  இது இங்கேயே நின்றுவிடப் போவதில்லை. இந்தத் துறையின் மூலம் நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »