கம்பஹா - மீரிகம பகுதியில் உள்ள துரியன் தோட்டமொன்றில் கடந்த திங்கட்கிழமை (14) மாலை இளைஞன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தோட்ட உரிமையாளரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்லை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.
19 வயதுடைய இளைஞனே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த இளைஞன் கடந்த திங்கட்கிழமை (14) மாலை மேலும் இரண்டு இளைஞர்களுடன் இணைந்து துரியன் தோட்டத்திற்கு சென்று துரியன் பழங்களை பறிக்க முயன்றுள்ளார்.
இதன்போது தோட்ட உரிமையாளர் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில் காயமடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து ஏனைய இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தோட்ட உரிமையாளர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
