Our Feeds


Monday, July 28, 2025

SHAHNI RAMEES

கோட்டாவுக்கு அல்லாஹ் ஏற்படுத்திய கேவலத்தை - சுட்டிக்காட்டிய Dr. ஷாபி ஷிஹாப்தீன்!

 

ஜனாதிபதியாக இருந்த தனி நபரை எந்தவொரு நாடும் பொறுப்பேற்கவில்லை-முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நிலையினை சுட்டிக்காட்டிய வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன்


பாறுக் ஷிஹான்


ஆட்சிக் கதிரையில் இருந்து நீக்கி ஜனாதிபதியாக இருந்த தனி நபரை எந்தவொரு நாடும் பொறுப்பேற்க மாட்டோம் என கூறும் ஒரு கேவலத்தை அல்லாஹ் மக்களுக்கு முன்பாக உருவாக்கி காட்டியிருக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நிலையினை மறைமுகமாக சுட்டிக்காட்டினார் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் .


இலங்கை நீதிக்கான மய்யம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை ஏற்பாடு செய்திருந்த வைத்தியர் ஷாபியும் கிழக்கு மக்களும் என்ற டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் குறித்த புத்தக அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


இதன் போது கருத்து தெரிவித்த அவர்.


சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்’ என்ற நூல் மக்களை சென்றடைய வேண்டும்.எனக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் உள்ளக் குமுறல்களை பகிர்ந்து கொள்ளவும் நேரடி வாக்குமூலம் வழங்கவும் இன்று இங்க உரையாற்றுகின்றேன்.அதுமாத்திரமன்றி அடைக்கலம் கொடுத்த கிழக்கு மக்களுக்கு நன்றி கூற கடமைப்படுத்தபட்டுள்ளேன்.இது தவிர எனக்கு அநீதி நடந்த போது ஆட்சிக் கதிரையில் ஜனாதிபதியாக இருந்த தனி நபரை எந்தவொரு நாடும் பொறுப்பேற்க மாட்டோம் என கூறும் ஒரு கேவலத்தை அல்லாஹ் மக்களுக்கு முன்பாக உருவாக்கி காட்டியிருக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நிலையினை மறைமுகமாக சுட்டிக்காட்டினார் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »