மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2,019 சிறுவர்கள் உட்பட நாட்டில் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று(13) பழைய கச்சேரிமண்டபத்தில் அபிவிருத்திகுழுத் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்தின்நெத்தி தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தகவல் வெளியிட்டார்.
இதில் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் தாயார் அல்லது தந்தையார் வெளிநாடு சென்றுள்ளமை அல்லது சிறுவர்களை விட்டுவிட்டு தாய் அல்லது தந்தை வேறு திருமணம் முடித்தமை அல்லது போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது போன்ற காரணங்களினால் தாய், தந்தை இல்லாது மட்டக்களப்பில் 700 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
அதேவேளை, மேல் மாகாணத்தில் 2,019 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இலங்கை முழுவதும் 4 ஆயிரம் சிறுவர்கள் இவ்வாறு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். எனவே இந்த குழந்தைகளுக்கு அன்பு, பராமரிப்பு, ஆதரவை வழங்குவதற்கும் அவர்களின் கல்வியை பல்வேறு வழியில் தொடர்வதை உறுதி செய்வதற்கும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இத்துடன் மாவட்டத்தில ஆரையம்பதி பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கான தீர்மா னம் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 600 பொலிஸார் கடமையாற்ற வேண்டிய நிலையில் 300 பொலிஸெ மாத் திரமே தற்போது உள்ளனர். எனவே இந்தக் குறைபாட்டை நிலர்த்திசெய்ய 50 பொலிஸார் இப்போதைக்கு மாவட்டத் துக்கு வழங்கப்படும்.
சட்டவிரோதகசிப்பு எற்பத்திமற்றும் சட்டவிரோதமதுபான விற்பனைகளைத் தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையுடன் பொலிஸார் இணைந்து ஒவ்வொரு பொலிஸ் நிலையப் பிரிவிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த சட்டவிரோத மதுபானத்தை இல்லாது ஒழிக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக பிரதேச சபைத் தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலை நடாத்தி தமது கவலைகளை முன்வைத்தனர். இதற்க மைய புவியியல் சுரங்க பணியகம் ஒவ்வொரு நபருக்கும் வழங்கும் உரிமம் தொடர்பாக எந்த நேரத்திலும் பொலிஸார், பிரதேச செயலாளர், பிரதேச சபையினர் கேட்டால் விவரம் தெரிவிக்கவேண்டும்.
அவ்வாறே இன்றுவரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மண் அகழ்வு அனுமதிபத்திரம் தொடர்பாக உடனடியாக அரசாங்க அதிபருக்கும் மற்றும் அபிவிருத்திகுழுத் தலை வருக்கும் விவரம் வழங்கப்படவேண்டும். அதேவேளை இந்த சட்டவிரோத மணல் அகழ்வோர் வாகனங்களை நிறுத்தி தேவையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு தீர்மானிக் கப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும். - என்றார்.
