பொரளையில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டி56 ரக துப்பாக்கியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
