Our Feeds


Thursday, August 7, 2025

SHAHNI RAMEES

தவறுதலாக சி.ஐ.டிக்கு சென்ற சாகல!

 



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாம்

பிரதானி சாகல ரத்நாயக்க (Sagala ratnayaka) தவறுதலாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்றுக் காலை சென்றுள்ளார்.


நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தவறுதலாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) சென்றுள்ளார்.


பின்னர் அங்கிருந்து வெளியேறி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் முன்னிலையானார். 


முதலாம் இணைப்பு 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க (Sagala ratnayaka) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.


வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் இன்று (06) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜனாதிபதி செயலகத்தின் நிதி


கடந்த அரசாங்க ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில் சாகல குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.


இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா, வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.


ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »