Our Feeds


Sunday, August 17, 2025

Zameera

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் ஆரம்பம்

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, அடுத்த மாதம் முதல் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.


சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி, பொருத்தமான மீனவர்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெறுவதாகக் கூறியுள்ளார்.


விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன. முன்னர் இத்திட்டம் செயலிழந்தபோது, சுமார் 60,000 மீனவர்கள் இதன் பலன்களைப் பெற்று வந்துள்ளனர்.


திட்டம் மீண்டும் தொடங்கும்போது, இதனைவிட அதிகமான மீனவர்களுக்கு பயனளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »