Our Feeds


Saturday, August 30, 2025

Admin

ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்!



நுவரெலியா, அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் கதிர்காமம் போன்ற பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். 

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். 

2026 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய வெறும் ஊக்குவிப்புத் திட்டங்கள் மட்டும் போதாது என்றும், அரச மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைக்கும் புதிய மூலோபாயத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »