Our Feeds


Thursday, August 14, 2025

Sri Lanka

வடக்கு - கிழக்குப் போக்குவரத்துக்காக புதிய பாலம் அமைக்க கோரிக்கை!


முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலத்தை அமைக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பதற்கு எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (13) இடம்பெற்ற சந்திப்பில் ரவிகரன் எம்.பி. குறித்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுயளித்துள்ளார்.

மேலும் இப்பாலம் அமைக்கப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன், சுற்றுலாத்துறையும் மேம்படும் என இதன்போது ரவிகரன் எம்.பி. ஜனாதிபதிக்கு இந்தப் பாலத்தை அமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியதையடுத்து, இப்பாலத்தை அமைப்பதற்கு அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »