உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கமாகக் கருதப்படும் சிலியில் உள்ள எல் டெனியென்ட் சுரங்கம் பகுதியளவு இடிந்து விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிலியைத் தாக்கிய 4.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக அச் சுரங்கம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
சுரங்கம் இடிந்து விழுந்தபோது தொழிலாளர்கள் 900 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதேவேளை சுரங்கத்தில் சிக்கிய 5 தொழிலாளர்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, மேலும் இரண்டு தொழிலாளர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மீட்புப் பணியில் 100 பேர் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
