Our Feeds


Sunday, August 10, 2025

Zameera

முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை : ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - இம்ரான் எம்.பி

கிழக்கு மாகாண முன் பள்ளி ஆசிரியைகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப் படவில்லை என்ற தகவல் மிகவும் கவலை அளிக்கிறது.

கிழக்கு மாகாண ஆளுநர் இது விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு கடைசியாக மே மாதம் வழங்கப் பட்டதாகவும், ஜூன், ஜூலை மாதங்களுக்கான கொடுப்பனவு இதுவரை வழங்க படவில்லை எனவும் முன்பள்ளி ஆசிரியைகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இது இந்த ஆசிரியைகளுக்கு இழைக்க படுகின்ற அநீதியாகும்.

கிழக்கு மாகாணத்தின் கல்விக்கு பலமான அத்திவாரம் இடுபவர்கள் முன்பள்ளி ஆசிரியைகள் தான்.

இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதில் ஏன் இந்த அரசாங்கம் பொடு போக்காக உள்ளது?

கொடுப்பனவுக்கான நிதி இதுவரை விடுவிக்கப் படாததாலேயே கொடுப்பனவு தாமதம் நிலவுவதாக கூறப் படுகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப் பட்ட முன்பள்ளி நிர்வாகமே இப்போது இயங்குகின்றது.

எனவே ஆளுநரே இந்த விடயத்தில் தலையிட்டு மாதாந்தம் உரிய காலத்தில் கொடுப்பனவு வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »