Our Feeds


Saturday, August 23, 2025

Sri Lanka

யாரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்க யூடியூபர் சுதா நீதிபதியா? - சாமர சம்பத்!


நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். இது உண்மையா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வாக்குமூலமளிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலையாகினார். ஆனால் அவர் கைது செய்யப்படுவதாக யுடியுபர் சுதா என்பவர்  முன்னதாகவே குறிப்பிடுகிறார். யூடியூபர் சுதா நீதிபதியா , யாரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு இவ்வாறானவர்களின் முறையற்ற கருத்துகளுக்கு அரசாங்கமே இடமளித்துள்ளது. இது வெட்கத்துக்குரியதொரு செயற்பாடு என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் சாடினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22)   நடைபெற்ற  அமர்வின் போது வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு  பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வரலாற்றை மறந்து விட்டு செயற்பட கூடாது. வடக்கு ,கிழக்கு மற்றும் மலையக மக்களின் மனித உரிமைகள் மீறல் பற்றியே பேசப்படுகிறது. இந்த மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் உள்ளவர்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன.அவை பற்றி எவரும் பேசுவதில்லை.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். இது உண்மையா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வாக்குமூலமளிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலையாகினார்.ஆனால் அவர் கைது செய்யப்படுவதாக யூடியூபர் சுதா என்பவர் குறிப்பிடுகிறார்.

யூடியூபர் சுதா நீதிபதியா யாரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு .இவ்வாறானவர்களின் முறையற்ற கருத்துகளுக்கு அரசாங்கமே இடமளித்துள்ளது.இது வெட்கத்துக்குரியதொரு செயற்பாடு.

நாட்டின் மூன்றாம் பிரஜையான பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் பொது நிகழ்வொன்றுக்கு சென்றுள்ளார்.அவ்விடத்தில் வைத்து இந்த சுதா என்பவர் பிரதமர் தோளில் அடித்து பேசியுள்ளார்.

இது வெட்கத்துக்குரிய செயற்பாடு. நாட்டின்  மூன்றாம் பிரஜையிடம் இவ்வாறான நடந்துக்கொள்வது. நாயுடன் உறங்கினால் உன்னிகளுடன் எழும்ப வேண்டும் என்ற பழமொழி உள்ளது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »