இலங்கை இளைஞர் சம்மேளனத்தின் 19வது தேசிய இளைஞர் மாநாடு மற்றும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரும் சர்வதேச இளைஞர் தினம் தொடர்பான பொது விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று (06) நுவரெலியாவில் நடைபெற்றது.
நுவரெலியா தபால் அலுவலகம் அருகே தொடங்கிய இளைஞர் நடைப்பயணத்தில் மாவட்டத்தின் அனைத்து பிராந்திய கிளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
நடை பயணத்திற்குப் பிறகு நுவரெலியா நகர மண்டபத்திற்கு வந்த இளைஞர்கள் அங்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
மஸ்கெலியா நிருபர்.
