Our Feeds


Friday, August 22, 2025

Zameera

இன்று எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை


 நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 
அதன்படி, வட, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவில் வெப்பநிலை காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
மேற்படி மாகாணங்களில் உள்ள மக்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகுவதுடன், வயதானவர்கள் மற்றும் நோயாளர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »