அமெரிக்க கடற்படையின் போர் கப்பலான சான்டா பாப்ரா
(u s s santa barbara) இன்று சனிக்கிழமை (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட கால நட்புறவின் சின்னமாக அமெரிக்க கடற்படையின் சான்டா பாப்ரா கப்பல் காணப்படுகின்றது.
அமெரிக்காவும் இலங்கையும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்தியப் பெருங்கடல் உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.
அமெரிக்காவும் இலங்கையும் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் பல்வேறு நோக்கங்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக தமது நட்புறவை பேணி வருகின்றது.
அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் உள்ள நட்புறவை சான்டா பாப்ரா கப்பல் எடுத்துக்காட்டுகிறது.
இது கடற்பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்புகளை ஊக்கமளிக்கின்றது.
இலங்கையின் பல்வேறு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
