“ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை போன்றே ஹரிணி அமரசூரியவும் எங்களுக்கு பெறுமதிமிக்க அரசியல் சொத்தாவார். அவர் மிகவும் முக்கியமான அரசியல் சொத்து. பிரதமர் எங்களுக்கு பெறுமதிமிக்க கதாபாத்திரம். நாங்கள் சகோதரத்துவத்துடன் செயற்படும் குழு. நாங்கள் பிரதமரை பாதுகாப்போம்” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நிகழ்வொன்றின் பின்னர் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மக்கள் விடுதலை முன்னணி என சகலரும் பல வருடங்கள் ஒன்றாக கடமையாற்றியுள்ளோம். எங்களுக்குள் புரிந்துணர்வு இருக்கிறது. ஒன்றாக கடமையாற்றி தோல்விகளை சந்தித்து தற்போது வெற்றிப் பெற்றுள்ளோம். எங்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை போன்றே ஹரிணி அமரசூரியவும் எங்களுக்கு பெறுமதிமிக்க அரசியல் சொத்தாகும். அவர் மிகவும் முக்கியமான அரசியல் சொத்து. மிகவும் அன்புடன் மிக நெருக்கத்துடன் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் பிரியும் நாளை எதிர்பார்த்து சஜித்தும் நாமலும் அழுது அழுது இருக்க முடியும். அவர்களே பிளவடைந்துள்ளார்கள். எனவே, நேரத்தை வீணக்காமல் இருக்கமாறு கோருகிறோம். ஐந்து வருடங்களை முழுமையாக ஆட்சி செய்வோம்.
மஹிந்த ராஜபக்ஷ பயணித்த விமானத்தில் ஏதாவது கோளாறு நடத்தாவது தமக்கு ஆட்சி பலம் கிடைக்காதா என்று சஜித், ரணில் தரப்பினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அது பிரதமருக்கு பொறுப்பான அமைச்சம் இல்லை. வேறு அமைச்சுகள் தொடர்பிலும் பதலளிக்கும் கடப்பாடு பிரதமருக்கு இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதுதொடர்பில் கேள்வி எழுப்பியதும் சில மாதங்களுக்கு முன்னர் அதற்கு பதில் கிடைத்திருந்தது. அந்த பதில் முழுமையடையாமல் இருந்தததால் அதற்காக அவர் காலம் எடுத்துக்கொண்டார். நீண்ட காலத்துக்கு பின்னரே அதற்கான பதிலை வழங்கியிருந்தார். இருந்தபோதும் அந்த பதில் முழுவமையாக உண்மை தன்மை கொண்டதா என்று கூற முடியாது.
அந்த இடத்தில் அரசியல் நாடகம் அரங்கேற்றும் அவசியம் பிரதமருக்க இல்லை. பிரதமர் எங்களுக்கு பெறுமதிமிக்க கதாபாத்திரம். நாங்கள் சகோதரத்துவத்துடன் செயற்படும் குழு. நாங்கள் பிரதமரை பாதுகாப்போம். பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாப்போம். அமைச்சர்களையும் பாதுகாப்போம்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்து இருக்கிறார்கள். பிரதி அமைச்சர் ஜெனரல் அருண ஜயசேகரவையும் பாதுகாப்பும். இந்த சிக்கலை மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான முரண்பாடாக கருத முடியாது. இதிலுள்ள அரசியல் விளையாட்டு என்னவென்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.
