Our Feeds


Thursday, August 7, 2025

Sri Lanka

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மாற்றுக்கருத்துடையவர்கள் எம்முடன் பேசலாம் - நளிந்த ஜயதிஸ்ஸ!


நாட்டின் கல்வி முறைமை மறுசீரமைக்கப்படவேண்டிய அவசியமில்லை எனக் கூறுபவர்களுடன் நாம் பேசப்போவதில்லை. மாறாக கல்வி மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்தவாறு மாற்றுக்கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைப்போருடன் பேசுவதற்குத் தயாராக இருக்கிறோம் என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (5) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதன்போது அரசாங்கத்தினள் கல்வி மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் வெளியிடப்பட்டுவரும் விமர்சனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் கருத்துரைத்த அவர், கடந்த பல வருடகாலமாக கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டுவருவதாகவும், அவற்றின் அடிப்படையில் அரசாங்கத்தினால் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் கல்வி மறுசீரமைப்பு செயன்முறையானது பல்வேறு கூறுகளை உள்ளடக்கியிருப்பதாகவும், இவ்விடயத்தில் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் தம்முடன் கலந்துரையாடமுடியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

அத்தோடு தற்போதைய சூழ்நிலையில் கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வது அவசியமில்லை என்று கூறுபவர்களுடன் பேசவேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »