
இலங்கையில் இடம்பெற்ற, இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தைரியமாக உரத்து குரல் எழுப்பி வரும் 3 ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, மொஹமட் பசீர் மற்றும் தரிந்து உடுவரகெதர ஆகியோர் இணைந்து செம்மணி படுகொலைகள் தொடர்பில் “செம்மணி” எனும் பெயரில் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ள புத்தகம் தெற்கின் சிங்கள மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
வட கிழக்கின் செய்திகள் தெற்கின் சிங்கள மக்கள் மத்தியில் ஆதாரத்துடன், விரிவாக நியாய கண்ணோட்டத்தில் பேசப்படாதிருந்த குறையை தற்போது இளம் ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பலரும் பேச ஆரம்பித்துள்ள நிலையில், “செம்மணி” பற்றிய நூல் கடந்த 14.08.2025 அன்று தேசிய நூலக அரங்கத்தில் வெளியிடப்பட்டது.







