Our Feeds


Wednesday, August 27, 2025

SHAHNI RAMEES

நடிகர் விஜயின் கச்சத்தீவு பேச்சு - ShortNews இன் கேள்விக்கான அமைச்சரின் பதிலை செய்தியாக்கிய BBC

 



நடிகர் விஜயின் கச்சத்தீவு பேச்சு - ShortNews இன் கேள்விக்கான

அமைச்சரின் பதிலை செய்தியாக்கிய பி.பி.சி


இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் ShortNews ஊடகவியளாரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.


சமீபத்தில் இந்தியாவுக்கு மீண்டும் கச்சத்தீவை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கூறியிருந்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த அவர், "கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவு. இது எந்த விதத்திலும் மாறாது. தென்னிந்தியாவில் தேர்தல் காலம் என்பதால் வாக்குகளை பெற ஒவ்வொருவரும் கருத்துக்களை கூறுவார்கள்." எனக் கூறினார்.


மேலும் பேசிய அவர், "இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் தேர்தல் மேடைகளில் இவ்வாறு கூறியுள்ளனர். விஜய் கூறியதை பெரிதுப்படுத்த தேவையில்லை. மத்திய அரசிடமிருந்தோ அல்லது ராஜதந்திர ரீதியாகவோ எந்த மாற்றமும் இல்லை. நேற்று, இன்று, நாளை கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாகவே இருக்கும்" எனத் தெரிவித்தார்.


-நன்றி BBC TAmil-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »