Our Feeds


Saturday, September 20, 2025

Zameera

குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்கள் பொகவந்தலாவ வைத்திய சாலையில்.


இன்று மதியம் பொகவந்தலாவ கொட்டியாகல தோட்ட கொட்டியாகல பிரிவில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த 12 பெண்கள் இரண்டு ஆண்களை கொட்டியுள்ளது.


குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்களும் பொகவந்தலாவ மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான வர்கள் 35 வயது தொடக்கம் 53 வயது உடையவர்கள் என்று பொதுவாக வைத்திய சாலையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இது குறித்து பொகவந்தலாவ பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மஸ்கெலியா நிருபர்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »