Our Feeds


Monday, September 29, 2025

Sri Lanka

மாணவர்களுக்கு இலவச AI தேடுப்பொறி கருவிகளை வழங்க கூகிள் நிறுவனத்தை நாடும் இலங்கை!


இலங்கை மாணவர்கள் விரைவில் கூகிளின் ஜெமினி மேம்பட்ட தேடுப்பொறி கருவிகள் மற்றும் பிற டிஜிட்டல் வளங்களை இலவசமாகப் பெறுவார்கள் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை (29) அறிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற 2025க்கான தேசிய AI எக்ஸ்போ கண்காட்சியில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இந்த திட்டத்தை அறிவித்தார். இது நாட்டின் கல்வித்துறைக்கு "பெரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும்" என  வலியுறுத்தினார்.

"நமது நாட்டின் AI திறனை வளர்ப்பதில் இது மகத்தான ஒரு மைல் கல்லாகும். இது விளையாட்டு மைதானத்துக்கு ஒத்த உலகளாவிய ரீதியில் சிறந்து விளங்குபவர்களுடன் போட்டியிட எங்கள் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது," என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »