நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அரசுக்கெதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இப் போராட்டத்தினால் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்திற்கு அரசு தடை விதித்ததுள்ளதாகவும் இருப்பினும் இத் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக நேபாள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்ததால் தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
